காழ்ப்புணர்வுடன் குற்றஞ்சாட்டுகிறார்

4

தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கவர்னர் ரவி, தி.மு.க., அரசின் மீது வழக்கம் போல குற்றம் சாட்டிஉள்ளார். முதல்வர் ஸ்டாலின், மாநில அளவில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் முனைந்து செயல்படுகிறார்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், முதல்வரால் துவங்கப்பட்டது. தி.மு.க., அரசின் மீது, காழ்ப்புணர்வுடன் குற்றஞ்சாட்டுவதை கவர்னர் ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

- வைகோ

பொதுச்செயலர், ம.தி.மு.க.,

Advertisement