பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

புதுடில்லி: பிரிட்டனின் மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை அவசியம் என இந்தியா வலியுறுத்தி உள்ளது.
பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கத்தியால் குத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் ஜெப ஆலயத்தில் வழிபாட்டின் போது நடந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த கொடூரமான செயல் நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
@quote@தீய சக்திகளிடமிருந்து நாம் எதிர்கொள்ளும் சவாலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய சமூகம் ஒன்றுபட்டு போராடி தோற்கடிக்க வேண்டும்.quote
பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறோம். இந்த துயர தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் ஆதரவாக இருப்போம். இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
@block_G@
மான்செஸ்டரில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குல் வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். பயங்கரவாதத்தை வலிமையும், ஒற்றுமையையும் இருந்தால் மட்டுமே தோற்கடிக்க முடியும்.block_G
@block_Y@
மான்செஸ்டரில் நடந்த தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. நாடு முழுவதும் உள்ள ஜெப ஆலயங்களுக்கு கூடுதல் போலீஸ் படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். யூத சமூகத்த்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.
எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இது யூதர்களைத் தாக்கிய ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல். யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவம் மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது. அதனை நாம் தோற்கடிக்க வேண்டும்.
block_Y








மேலும்
-
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
-
பாலுார் பெருமாள் கோவில் தேரோட்டம்
-
நாளை மாலைக்குள் முடிவெடுங்க இல்லையேல் நரகத்தை பார்ப்பீங்க ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
ரயில் வருவதை அறியாமல் 'ரீல்ஸ்' எடுத்த நால்வர் பலி
-
'ஏர் இந்தியா' விமான விபத்து அறிக்கை அவசரத்தில் தயாரிக்கப்பட்டது; இந்திய விமானிகள் சங்கம் குற்றச்சாட்டு
-
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்