துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி

இந்துார் : மத்திய பிரதேசத்தில், துர்கா சிலைகளை கரைக்க நீர்நிலைக்கு எடுத்துச் சென்றபோது, டிராக்டர் குளத்தில் கவிழ்ந்ததில் அதில் சென்ற சிறுவர் - சிறுமியர் எட்டு பேர் உட்பட, 11 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
மத்திய பிரதேசத்தின் காந்த்வா மாவட்டத்தில் உள்ள ஜம்லி கிராமத்தில் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப் பட்டது.
பந்தலில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை கரைப்பதற்காக டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, அருகேயுள்ள குளத்துக்கு பக்தர்கள் நேற்று முன்தினம் சென்றனர்.
அப்போது அதில் சிறுமி - சிறுமியர் உட்பட 25 பேர் அமர்ந்திருந்தனர்.
குளத்தின் அருகே டிராக்டரை பின்நோக்கி இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது. இதில், டிராக்டரில் இருந்த சிறுவர், சிறுமியர் எட்டு பேர் உட்பட 11 பேர் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த நீச்சல் வீரர்கள் மற்றும் மீட்புப்படையினர், 11 பேர் சடலங்களை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்பதால், தொடர்ந்து மீட்புப்பணி நடக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படுவதாக, பா.ஜ.,வை சேர்ந்த ம.பி., முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.
மேலும்
-
ம.பி.,யில் 11 குழந்தைகள் உயிரை பறித்த இருமல் மருந்து: பரிந்துரைத்த டாக்டர் கைது
-
இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்
-
'சாதனைகளின்' ஏட்டு சுப்புலட்சுமி
-
அக்.,6ல் அறுவடை முழு நிலவு: 'சூப்பர் மூன்' பவுர்ணமிக்கு இப்படியொரு சிறப்பு
-
கொண்டாட்டங்களின் தலைநகரம் கோவா: வண்டாட்டம் கடற்கரைகளில் பயணிகள்
-
தமிழக தேர்தல் நெருங்குவதால் அச்சம்: டில்லிக்கு பறக்க துடிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!