ரயில் வருவதை அறியாமல் 'ரீல்ஸ்' எடுத்த நால்வர் பலி

புர்னியா : பீஹாரில், மொபைல் போனில் 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற நான்கு இளைஞர்கள், அவ்வழியாக சென்ற வந்தே பாரத் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீஹார் மாநிலம் புர்னியா என்ற பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள், அங்கு நடந்த துர்கா பூஜை நிகழ்வில் பங்கேற்ற பின் தங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில், ரயில் தண்டவாளத்தில் நின்றபடி ஓடும் ரயில்களை, தங்கள் மொபைல் போன்களில் ரீல்ஸ்களாக எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்ற முயன்றனர்.
எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது, பீஹாரின் ஜோக்பானியில் இருந்து தானாபூர் நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும்
-
ம.பி.,யில் 11 குழந்தைகள் உயிரை பறித்த இருமல் மருந்து: பரிந்துரைத்த டாக்டர் கைது
-
இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்
-
'சாதனைகளின்' ஏட்டு சுப்புலட்சுமி
-
அக்.,6ல் அறுவடை முழு நிலவு: 'சூப்பர் மூன்' பவுர்ணமிக்கு இப்படியொரு சிறப்பு
-
கொண்டாட்டங்களின் தலைநகரம் கோவா: வண்டாட்டம் கடற்கரைகளில் பயணிகள்
-
தமிழக தேர்தல் நெருங்குவதால் அச்சம்: டில்லிக்கு பறக்க துடிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!