'பருத்தி ஆதார விலையை பின்பற்ற வேண்டும்'

புதுடில்லி:அனைத்து பருத்தி விளைவிக்கும் மாநிலங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

நடப்பு 2025--26ம் ஆண்டுக்கான காரீப் பருவ பருத்தி தொடர்பாக, ஐவுளித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

பருத்தி கொள்முதலுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்துதல் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டை சேர்ப்பதற்கான தேசிய உத்தியை மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். இதற்காக, பருத்தி விளையும் 11 மண்டலங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 550 பருத்தி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Advertisement