குன்றத்துாரில் வாலிபரை வெட்டிய 6 பேர் கைது

குன்றத்துார்:குன்றத்துார் அருகே, மது போதையில் வாலிபரை வெட்டிய, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

குன்றத்துார் அருகே பூந்தண்டலம், டி.சி., நகரைச் சேர்ந்தவர் ஆனந்த், 24. இவரது வீட்டிற்கு, கடந்த 30ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு சென்ற மர்ம நபர்கள், ஆனந்தை வீட்டில் இருந்து வெளியே அழைத்து, கத்தியால் வெட்டிவிட்டு ஆட்டோவில் ஏறி தப்பினர்.

பலத்த வெட்டுக்காயமடைந்த ஆனந்தை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமுடிவாக்கம் போலீசார் விசாரணையில், ஆனந்தை மது போதையில் முன் விரோதம் காரணமாக வெட்டியது, அதே பகுதியைச் சேர்ந்த குமார், 20, சூர்யா, 24, அய்யப்பன், 23, செல்வம், 21, விஜய், 25, மணிகண்டன், 23, ஆகியோர் என்பது தெரிந்தது.

மேலும், இவர்கள் பூந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், 24, என்பவரை, கடந்த 30ம் தேதி வெட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, இவர்களிடம் இருந்து, ஆட்டோ மற்றும் கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், ஆறு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement