பாஜவுக்கு எம்.எல்.ஏ.,க்களை சப்ளை செய்யும் காங்கிரஸ்: சொல்கிறார் கெஜ்ரிவால்

புதுடில்லி:'காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. 2027 கோவா சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மாயேம் பகுதியில் ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு, அவர் கூறியதாவது; காங்கிரஸூடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக எம்எல்ஏக்களை காங்கிரஸ் மொத்தமாக பாஜவுக்கு விநியோகித்து வருகிறது. எதிர்காலத்தில் எந்தவொரு காங்கிரஸ் எம்எல்ஏவும் பாஜவுக்கு மாற மாட்டார்கள் என்று கோவா வாக்காளர்களுக்கு அக்கட்சியால் உறுதியளிக்க முடியுமா?
2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவினர்.2022ம் ஆண்டில் மட்டும் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்தனர். ஆம்ஆத்மி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், அது பாஜவுக்கு எம்எல்ஏக்களை வழங்குவதற்கு சமமாகி விடும். கோவாவில் பாஜ அரசு அமைவதற்கு உதவும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
கோவாவில் அமைந்துள்ள காங்கிரஸ் மற்றும் பாஜவின் சீரழிந்த அரசியல் கட்டமைப்பை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு, கோவா மக்களுக்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது, இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
அக்., 29 - 31ல் சென்னையில் 'விண்டெர்ஜி இந்தியா' மாநாடு
-
நாடு முழுதும் ஐ.டி.ஐ.,க்களை தரம் உயர்த்தி பயிற்சி தர..ரூ.60,000 கோடி . உடனடி வேலையை உறுதி செய்ய பிரதமர் புது அறிவிப்பு
-
தொழில்மனை வாங்கி உற்பத்தி துவங்காத நிறுவனங்கள் மீது 'சிட்கோ' நடவடிக்கை காரணம் கேட்டு நோட்டீஸ்
-
'லிப்ட்' கதவு இடையே கால் சிக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு
-
புராவிடன்ட் கிரீன் பார்க் அபார்ட்மென்ட் அணி சாம்பியன்! 'தினமலர் பிரீமியர் லீக்' அபார்ட்மென்ட் கிரிக்கெட்டில் அபார ஆட்டம்
-
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை