சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த சவீதா கல்வி நிறுவன பேராசிரியர்கள்
சென்னை:உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில், சவீதா கல்வி நிறுவன பேராசிரியர்கள், 112 பேர் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை, எல்சிவியர் நிறுவனத்துடன் இணைந்து, உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 'ஸ்டான்போர்ட் - எல்சிவியர் ஸ்கோபஸ் - 2025'ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த சவிதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் கல்வி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
இந்த பட்டியலில், சவீதா கல்வி நிறுவனத்தின், 112 பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில், இந்தியா அளவில், ஐ.ஐ.எஸ்.சி.,யை சேர்ந்த 134 விஞ்ஞானிகள் இடம் பிடித்துள்ளனர். ஐ.ஐ.எஸ்.சி., பெங்களூருவுக்கு அடுத்தபடியாக, சவீதா கல்வி நிறுவனம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவின் தலைசிறந்த, 500 விஞ்ஞானிகளில், சவீதா கல்வி நிறுவன விஞ்ஞானிகளின் எண்ணிக்கை அதிகம்.
இதுகுறித்து, சவீதா கல்வி நிறுவனத்தின் வேந்தர் என்.எம்.வீரய்யன் கூறியுள்ளதாவது:
ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்.சி., போன்ற தேசிய கல்வி நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம் என, நினைக்கப்பட்ட சாதனையை, சவீதா கல்வி நிறுவனம் நிகழ்த்தி உள்ளது. இதன் வாயிலாக, அறிவியல் வல்லரசாக இந்தியா உருவெடுக்கும் என்ற புதிய அத்தியாயம் துவங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
18ம் கால்வாய் நீரை போடி வரை திறக்க கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
-
சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
-
பஸ்கள் மோதியதில் கண்ணாடி சேதம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
-
அமைச்சர் ஆய்வு செய்யவிருந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குண்டு மிரட்டல் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவுக்கும் மிரட்டல்
-
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்