பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு
கள்ளக்குறிச்சி : ரிஷிவந்தியம் அருகே பெண்ணை திட்டி தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த குமரவேல் மனைவி ராஜகுமாரி, 37; இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கண்ணு மகன் ஏழுமலை, 38; என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் ராஜகுமாரி கடந்த செப்., 28ம் தேதி, முனிவாழை கிராமத்தில் உள்ள தனது உறவினரை சந்திப்பதிற்காக சென்றார். அப்போது, ஏழுமலை மற்றும் அவரது மனைவி ஜெயமாலா ஆகியோர் ராஜகுமாரியை வழிமறித்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement