மோர்குழம்பு

தேவையான பொருட்கள்:

தயிர் - ஒரு கப்

தேங்காய் - அரை கப் (துருவியது)

பச்சை மிளகாய் - மூன்று

வெள்ளரிக்காய் - சின்ன துண்டு (நறுக்கியது)

இஞ்சி - சிறிதளவு

சின்ன வெங்காயம் - மூன்று

காய்ந்த மிளகாய் - மூன்று

கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன் (ஊறவைத்தது)

சீரகம் - அரை ஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன்

மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்

பெருங்காயத்துாள் - அரை ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்

உப்பு - சுவைக்கு ஏற்ப

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

மோர் குழம்பு செய்ய முதலில், எடுத்து வைத்துள்ள கடலை பருப்பை சுமார் 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காயை சேர்த்து வதக்கவும். இதனை அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் துருவி வைத்து தேங்காயம், சீரகம், சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு மையாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது இதனை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் வெள்ளரிக்கையுடன் சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் துாள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது எடுத்து வைத்துள்ள தயிருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, இதில் ஊற்றவும். இப்போது மீண்டும் ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்துாள், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். தாளித்த இதனை அடுப்பில் இருக்கும் வெந்து கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றவும். சிறிது நேரம் கழித்து அடுப்பை இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் ஐயர் வீட்டு மோர் குழம்பு ரெடி.

Advertisement