அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் திருமண மண்டபத்தில் நடந்தது.
மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், நகர் தலைவர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2026சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளின்செயல்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர், மதுரை புறநகர் கிழக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தியாகு ஆகியோர் பேசினர்.
பேரூராட்சி முன்னாள் தலைவர் சேட்டுஅருணாசலம் நன்றி கூறினார். ஆண்டிபட்டி ஒன்றிய, நகரில் உள்ள 149 கிளை நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தேனி: அ.தி.மு.க., நகர பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். மதுரை புறநகர் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் தியாகு பூத் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நகர துணைச்செயலாளர் சுந்தர பாண்டியன், இளைஞரணி மாவட்ட நிர்வாகி தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.