கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம்: ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புக்குழு விசாரணை தொடக்கம்!

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு இன்று விசாரணையை தொடங்கியது. சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
கரூரில் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டு இருந்தது.
இதுவரை விசாரணை நடத்தி வந்த, விசாரணை அதிகாரி பிரேம் ஆனந்த் வழக்கின் கோப்பு மற்றும் ஆதாரங்களை ஐ.ஜி.,யிடம் ஒப்படைத்தார். சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர். ஐ.ஜி., அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் மேலும் 8 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சம்பவ நடந்த வேலுச்சாமிபுரத்தில் இருந்து இன்று விசாரணை தொடங்கி உள்ளனர். இவர்கள் விசாரணை நடத்தி முடித்து, தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பார்கள். பிறகு இந்த வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.
@block_P@
வேலுச்சாமி புரத்தில் 45 நிமிடங்கள் ஆய்வு பிறகு ஐஜி அஸ்ரா கார்க்: தற்போது தான் விசாரணையை தொடங்கி உள்ளோம். ஆய்வு செய்தோம். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து உள்ளோம். இது தொடர்பாக தற்போது ஏதுவும் கூற முடியாது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் என்னுடன் 2 எஸ்பி.,க்கள், ஒரு கூடுதல் எஸ்பி, 2 டிஎஸ்பி.,க்கள் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.block_P
மேல் முறையீடு
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால் முன்ஜாமின் கோரி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இன்று இருவரும் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.









