உலக பாட்மின்டன்: சாதிக்குமா இந்தியா

கவுகாத்தி: அசாமின் கவுகாத்தியில், உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. 17 ஆண்டுகளுக்கு பின், இத்தொடர் இந்தியாவில் நடத்தப்படுகிறது. கடைசியாக 2008ல் புனேயில் நடந்தது. இம்முறை இரண்டு கட்டமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இன்று முதல், வரும் அக். 11 வரை கலப்பு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடக்கும். பின், அக். 13-19ல் தனிநபர், இரட்டையர் பிரிவு போட்டிகள் நடத்தப்படும்.
மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கு அணி, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி, 'எச்' பிரிவில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ.,), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் இன்று நேபாளத்தை சந்திக்கிறது. அதன்பின் இலங்கை (அக். 7), யு.ஏ.இ., (அக். 8) அணிகளை எதிர்கொள்ளும்.
இந்திய அணியில் உன்னதி ஹூடா, தன்வி சர்மா, ரக் ஷிதா ஸ்ரீ, ரவுனக் சவுத்ரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சொந்த மண்ணில் அசத்தினால் முதன்முறையாக பதக்கம் வென்று சாதிக்கலாம். இத்தொடரில் இந்தியாவுக்கு தனிநபர் பிரிவில் 11 பதக்கம் கிடைத்துள்ளது. கடந்த 2008ல் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் கிடைத்தது.
மேலும்
-
அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
-
மேற்குவங்கத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; கிராமமே புதையுண்ட துயர காட்சிகள்!
-
எவரெஸ்ட் மலையில் பனிப்புயல்; 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவிப்பு
-
சபரிமலை தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம்; கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி