நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உ ள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மதுரை மாவட்டம் எழுமலை பகுதியில், 13 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, கிருஷ்ணகிரியில், 12; நாமக்கல்லில், 11; சேலம் மாவட்டம் எடப்பாடியில், 10; சேலம் மாவட்டம் சங்கரி துர்க்கம் பகுதியில், 7; தென்காசி மாவட்டம் கருப்பா நதி அணையில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேலும், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 11 வரை லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார் மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று முதல் அக்டோபர், 9 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்,
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
-
மேற்குவங்கத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; கிராமமே புதையுண்ட துயர காட்சிகள்!
-
எவரெஸ்ட் மலையில் பனிப்புயல்; 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவிப்பு
-
சபரிமலை தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம்; கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி