கட்டாக்கில் வன்முறை: 144 தடை உத்தரவு
கட்டாக் ஒடிசாவின் கட்டாக்கில், துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தில் வன்முறை வெடித்த நிலையில், 13 போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கட்டாக் மாவட்டத்தில், துர்கா பூஜையையொட்டி பந்தல்களில் அமைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகள், கதாஜோடி ஆற்றில் கரைக்க சமீபத்தில், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஹாத்தி போகாரி என்ற பகுதியில் ஊர்வலம் வந்த போது, அதிக சத்தத்துடன் இசைக் கருவிகளை இசைத்ததாக இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.
இது வன்முறையாக மாறியதில், ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கட்டாக் நிர்வாகத்தின் உத்தரவை மீறி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், பித்யாதர்பூர் முதல் வன்முறை நடந்த ஹாத்தி போகாரி வரை இருசக்கர வாகன பேரணி நேற்று நடந்தது. இதை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது கவுரிசங்கர் பூங்கா பகுதியில் மோதல் வெடித்ததில், அங்குள்ள கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, கட்டாக்கில் உள்ள தர்கா பஜார், மங்களாபாக், கன்டோன்மென்ட், பூரிகாட், லால்பாக் உட்பட, 13 போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவதை தடுக்க, கட்டாக் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், இன்று இரவு 7:00 மணி வரை இணைய சேவை முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
-
மேற்குவங்கத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; கிராமமே புதையுண்ட துயர காட்சிகள்!
-
எவரெஸ்ட் மலையில் பனிப்புயல்; 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவிப்பு
-
சபரிமலை தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம்; கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி
-
தேனி ஆசிரியருக்கு விருது வழங்கி கவுரவிப்பு
-
எங்கள் நிறுவன வளர்ச்சியின் ஓர் அங்கம் 'தினமலர்'