கல்வி உபகரணம் வழங்கல்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் தமிழ் முதல் தேதி ஆலய வழிபாட்டு குழுவினர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.

கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், சரஸ்வதி மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளை லோகு குருக்கள் செய்து, சிறுவர்களை வாழ்த்தினார்.

ராஜசேகரன், பாலாஜி, நாகராஜன், அம்சா பாஸ்கரன் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.

Advertisement