அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவர் கொலையில் திருப்பம்: டெக்சாஸ் நபர் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, போலே சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், டெக்சாஸ் நகரை சேர்ந்த 28 வயதான ரிச்சர்ட் புளோரஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்திரசேகர் போலே, 27, என்பவர் பல் அறுவை சிகிச்சை மருத்துவ படிப்பை முடித்திருந்தார். மேல் படிப்புக்காக அவர் கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்று இருந்தார். 6 மாதங்களுக்கு முன்பே முதுநிலைப் படிப்பை முடித்த சந்திரசேகர், வேலைக்காக அங்கேயே வசித்து வந்த நிலையில் அங்குள்ள கேஸ் ஸ்டேஷனில் பகுதிநேர வேலையும் செய்து வந்தார்.
சில தினங்களுக்கு முன், கேஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த சந்திரசேகரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில், டெக்சாஸ் நகரை சேர்ந்த 28 வயதான ரிச்சர்ட் புளோரஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்த ஒரு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.




மேலும்
-
உற்பத்தி துறையின் முன்னோடி தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
ஒடிசாவில் பாஜ பிரமுகர் சுட்டுக்கொலை; பைக்கில் தப்பிய மர்ம நபர்களை தேடும் போலீஸ்
-
அக்டோபர் 12ல் சுற்றுப்பயணம் தொடக்கம்; நிபந்தனைகளுடன் நயினார் பிரசாரத்திற்கு அனுமதி
-
கட்டாக்கில் நீடிக்கும் வன்முறையால் பதற்றம்: இணையதள சேவை முடக்கம் மேலும் நீட்டிப்பு
-
பிரேமலதாவின் தாயார் அம்சவேணி காலமானார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு: ஒரு சவரன் ரூ.89,600!