கமல் சொல்வதை மக்கள் கவனிக்க மாட்டார்கள்: அண்ணாமலை

24

சென்னை: '' ராஜ்யசபா எம்பி கமல் சொல்வதற்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


கரூர் வேலுசாமிபுரத்தில் நடிகர் விஜய்யின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் ஆய்வு செய்தார்.

பிறகு அவர் கூறுகையில், பாதுகாப்பு குறைபாடு என்று யார் குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். என்ன நடந்தது என்று தெரியும். விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை சொல்லும் என்றார்.

இது தொடர்பாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: அண்ணாமலை கூறியதாவது: ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக கமல் , நீண்ட காலத்துக்கு முன்பே தனது ஆன்மாவை விற்றுவிட்டார். இதனால், கமல் என்ன பேசினாலும் அதனை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்போவது கிடையாது. முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். கரூருக்கு சென்று நிர்வாகத்தின் தோல்வி இல்லை என்று அவர் கூறுவதை யார் ஏற்றுக் கொள்வார்கள். கமல் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அரசியலை பொறுத்தவரை அவர் என்ன பேசினாலும் அது ஒரு தலைபட்சமானது என்பதை நாம் அறிவோம். கரூர் போன்ற பிரச்னைகளில் கூட அவர் திமுகவை ஆதரிக்கிறார். திமுக மீது தான் தவறு என்பதை அனைவரும் அறிவார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement