வளர்ப்புப் பிராணிகள் மூலம் உண்ணி காய்ச்சல் பரவ வாய்ப்பு ; ஆடு, மாடு, நாய்களிடம் எச்சரிக்கை தேவை

பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள், உண்ணிகள் ஆடு, மாடு, நாய்களின் உடலில் ஒட்டிக் கொண்டு வாழும். ஆடு, மாடுகள் மலைப்பகுதிகளிலும் புதர்களிலும் மேய்வதால் அந்த இடங்களில் ஒட்டுண்ணிகள் அதிகம் காணப்படும்.
மேலும் வீடுகளைச் சுற்றி ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தால் அவை மூலம் தெரு நாய்கள், வீட்டில் வளர்க்கும் நாய்களையும் இந்த ஒட்டுண்ணிகள் தொற்றிக் கொள்கின்றன. நாய்களை குளிக்க வைக்கும் போதோ, கொஞ்சும் போதோ இந்த உண்ணிகள் மனிதர்கள் மீதேறி கடிக்க வாய்ப்புள்ளது.
அதனால் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன். அவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 2025 ஜனவரி முதல் தற்போது வரை 77 பேர் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். செப்டம்பரில் 6 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். உயிரிழப்பு இல்லை. இந்த உண்ணி கடிக்கும் போது உடனடியாக பாதிப்பு தெரியாது. அடுத்தடுத்த நாட்களில் கொப்புளம் போன்ற தடிப்பு ஏற்படும். இருமல், சளியின்றி காய்ச்சல் ஏற்படும். 3 நாட்களில் காய்ச்சல் குணமாகாவிட்டால் ரத்தப்பரிசோதனை (எலீசா) செய்ய வேண்டும். உடலில் புண் போன்று காயமும் காய்ச்சலும் இருந்தால் சிகிச்சை பெறுவது அவசியம். கவனிக்காமல் விட்டால் உயிரிழப்பு ஏற்படலாம்.
வீட்டைச் சுற்றி ஆடு, மாடுகள் மேய்ந்தால் 3 பங்கு சுண்ணாம்பு, ஒரு பங்கு ப்ளீச்சிங் பவுடர் கலந்து வீட்டைச்சுற்றி துாவவேண்டும். நாய்கள் வெளியில் சென்று வந்தால் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீரில் காலை கழுவ வைக்கும்போது கிருமித்தொற்று, உண்ணித்தொற்று வராது என்றார்.
மேலும்
-
எம்.ஜி.ஆர்., சிலை சேதம் அ.தி.மு.க., எச்சரிக்கை
-
விழுப்புரம் - நாகை புறவழிச்சாலையில் பைக் மீது கார் மோதி கவிழ்ந்தது
-
மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர்: டிரம்பை பாராட்டிய கனடா பிரதமர் மார்க் கார்னி
-
கூட்டுறவு வங்கியில் தீ
-
'கோட்டா சிஸ்டம்' பறிபோவதால் காங்., கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி
-
சீட்டு விளையாடிதை தட்டிக்கேட்டதில் தகராறு: ஆசிட் வீசியதில் 4 பேர் காயம்