பல மாதங்களாக வராத குடிநீர்: மக்கள் அவதி

ராமநாதபுரம்;போகலுார் ஊராட்சி ஒன்றியம் சத்திரக்குடி அருகேயுள்ள கீழாம்பல் கிராமம் சேதுபதி விவேகானந்தபுரம் கிராமத்திற்கு பல மாதங்களாக காவிரி குடிநீர் வராததால் குடம் ரூ.15 விலைக்கு வாங்கி மக்கள் சிரமப்படு கின்றனர்.

சேதுபதி விவேகானந்தபுரம் கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் எங்கள் பகுதியில் 150 வீடுகள் உள்ளன.

மற்ற இடங்களில் குடிநீர் தினமும் வழங்கப் படுகிறது. காவிரி குடிநீர் மாதம் ஒருமுறை வருகிறது. மற்ற நாட்களில் குடம் ரூ.15 விலைக்கு வாங்கி சிரமப்படுகிறோம்.

வருமானத்தின் ஒரு பகுதியை குடிநீருக்கு செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே எங்கள் பகுதிக்குரிய காவிரி குடிநீர் தினசரி வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement