ஏரான்துறையில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர்  எடுப்பு: கிராம  மக்கள் எதிர்ப்பு 

ராமநாதபுரம்; ஏர்வாடி அருகே ஏரான்துறை கிராமத்தில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர்எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதில், ஏரான்துறை கிராமத்தில் வியாபாரத்திற்காக சிலர் ஆழ் குழாய்அமைத்து நன்னீரை எடுக்கின்றனர்.

இதை நிறுத்த ஊர்மக்கள் வலியுறுத்தியபோதும்,அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சிலர் வீடு கட்டுவதற்கும் நன்னீரைஎடுத்து விற்கின்றனர். இச்செயல் காரணமாக நிலத்தடி நீர்மட்டம்குறைந்து அதன் சுவை மாறி உவர்ப்பு தன்மை அதிகரிக்கவாய்ப்பு உள்ளது.

எனவே குடிநீர் எடுப்பதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement