ரூ.6 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்

புதுடில்லி : திருப்பதியில் இருந்து சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு கடத்த முயன்ற, 6 கோடி ரூபாய் மதிப்பிலான 10 டன் செம்மர கட்டைகளை டில்லி போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் தடையை மீறி வெட்டப்படும் செம்மர கட்டைகளை மாநில வனத்துறையினர் மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு, அங்குள்ள கிடங்கில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த 10 டன் செம்மர கட்டைகள், கடந்த ஆகஸ்டில் மாயமாகின.
இதுபற்றி ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், நம் அண்டை நாடான சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு கடத்தி செல்ல ஏதுவாக, டில்லியில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதுபற்றி டில்லி போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, டில்லி போலீசார் தரப்பில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தியதில், டில்லி துக்ளகாபாதில் உள்ள ஒரு கிடங்கில் செம்மர கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு டில்லி போலீசாருடன், ஆந்திர போலீசாரும் இணைந்து சோதனை நடத்தினர்.
அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் செம்மர கட்டைகளை பறிமுதல் செய்ததுடன், தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த இர்பான், மஹாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த அமித் பவார் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு, 6 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
மேலும்
-
எம்.ஜி.ஆர்., சிலை சேதம் அ.தி.மு.க., எச்சரிக்கை
-
விழுப்புரம் - நாகை புறவழிச்சாலையில் பைக் மீது கார் மோதி கவிழ்ந்தது
-
மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர்: டிரம்பை பாராட்டிய கனடா பிரதமர் மார்க் கார்னி
-
கூட்டுறவு வங்கியில் தீ
-
'கோட்டா சிஸ்டம்' பறிபோவதால் காங்., கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி
-
சீட்டு விளையாடிதை தட்டிக்கேட்டதில் தகராறு: ஆசிட் வீசியதில் 4 பேர் காயம்