6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: ஸ்பெயினில் 4 பேர் பலி

மாட்ரிட்: ஸ்பெயினில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ஸ்பெயினின் மத்திய மாட்ரிட் நகரத்தில் 6 மாடிகள் கொண்ட ஒரு பழமையான கட்டடத்தை ஹோட்டலாக மாற்றும் வகையில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான கட்டுமான பணிகளில் ஈக்வடார், கினியா, மாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் வழக்கம் போல் கட்டுமானப் பணிகளில் மும்முரமாக மூழ்கி இருந்தனர்.

அப்போது, கட்டடத்தின் உட்புற பகுதி திடீரென இடிந்து விழுந்தது. கட்டுமான பணிகளில் ஈடுபட்டு இருந்த 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளே சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் இருந்த மீளமுடியாமல் அவர்கள் அங்கேயே உயிரிழந்தனர்.

கட்டடம் இடிந்தது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கே விரைந்து சென்றனர். சடலங்களை மீட்ட அவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இடிந்து விழுந்த கட்டடம் 1965ம் ஆண்டு கட்டப்பட்டது. 2012 மற்றும் 2022ம் ஆண்டு ஆய்வுகளுக்கு பின்னர், கட்டடத்தின் உறுதித்தன்மை பாதுகாப்பற்றதாக வகைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, சவுதியை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றின் மூலம் நட்சத்திர ஹோட்டலாக மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கின. அதன் பின்னரே இப்படி ஒரு விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement