ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ: 6 பேர் பரிதாப பலி

2

விஜயவாடா: ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ஆந்திர மாநிலம் ஆம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள பானா சஞ்சா பட்டாசு தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த ஆலை லைசென்ஸ் பெற்று இயங்கி வருகிறது. பட்டாசுகளை தவறாக கையாண்டதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் 6 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்துகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்ததுடன், நிவாரண உதவி மற்றும் மருத்துவ உதவி குறித்தும் ஆலோசித்தேன். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிவாரண உதவி வழங்கும்படி உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

இரங்கல்



பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'ஆந்திர பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' எனக்கூறியுள்ளார்.

Advertisement