உலகப் பொருளாதாரம். எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது: ஐஎம்எப் தலைவர் பெருமிதம்

நியூயார்க்: உலகப் பொருளாதாரம். எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது என சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.,) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.,) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியதாவது: பல சவால்களை எதிர்கொண்டாலும், உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. அதிக வரிகளை எதிர்கொள்வதால், உலகளாவிய வளர்ச்சி சற்று குறைய வாய்ப்புள்ளது. அதிக வரிகள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட மிதமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேமிப்புகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு வர்த்தகத்தை வலுப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு உலகளாவிய பொருளாதாரம் 3% வளர்ச்சியடையும். தங்கத்திற்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிக வரி விதிப்பு பணவீக்கத்தை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சியில் தாக்கங்களை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த வாரம் வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் கூட்டத்திற்கு முன்னதாக கிறிஸ்டலினா ஜார்ஜீவா உலக பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும்
-
கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் விலை உயர்வு
-
மல்லிகை கிலோ ரூ.480க்கு ஏலம்
-
பேன்சி கடையில் பதுக்கி வைத்திருந்த 270 குட்கா பொருட்கள் பறிமுதல்
-
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உரிமையாளர் விபரீத முடிவு
-
தபால் வார விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உரை வெளியீடு
-
கொம்பாடிபட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்