தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உரிமையாளர் விபரீத முடிவு
ஈரோடு, ஈரோடு அருகே, நசியனுார் தொட்டிபாளையம் லட்சுமி கார்டனை சேர்ந்தவர் தர்மேந்திரன், 48. கடந்த, 20 ஆண்டுகளாக டயர் கம்பெனி வைத்து இருந்தார். ஓராண்டாக வியாபாரம் சரியின்றி நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் ஒரு மாதத்துக்கு முன், 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள தர்மேந்திரனுக்கு சொந்தமான லாரி விபத்தில் சிக்கியது. இதில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த, 7ம் காலை வீட்டில் இருந்து புறப்பட்டு பூசாரி தோட்டத்தில் உள்ள தன் கம்பெனிக்கு தர்மேந்திரன் சென்றார்.
அங்கு துாக்கிட்டு கொண்டார். தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொழில் நஷ்டம் ஏற்பட்டு, மன விரக்தியில் துாக்கிட்டு கொண்டதாக அவர் மனைவி சசிரேகா, வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
மேலும்
-
மேம்பால திறப்புக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டுவதாக அ.தி.மு.க., கோஷம்
-
கோவை - நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம்
-
போலீஸ் பூத்துக்கு வந்த நாகப்பாம்பு
-
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
-
ம.பி., குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் இருமல் மருந்து ஆலை உரிமையாளர் கைது
-
இருதய அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லை; ஏழை நோயாளிகள் பலியாகும் பரிதாபம்