பேன்சி கடையில் பதுக்கி வைத்திருந்த 270 குட்கா பொருட்கள் பறிமுதல்
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டியில், குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பிங்கி பேன்சி கடையில், போலீசார் ஆய்வு செய்ய சென்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும், கடையில் இருந்த ஒருவர் தப்பி செல்ல முயன்றார். அவரை பிடித்து விசாரித்தபோது உரிமையாளர் சந்தோஷ், 34, என்பதும், அவரது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சந்தோஷை கைது செய்த போலீசார், 270 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு, 2 லட்சம் ரூபாய்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேம்பால திறப்புக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டுவதாக அ.தி.மு.க., கோஷம்
-
கோவை - நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம்
-
போலீஸ் பூத்துக்கு வந்த நாகப்பாம்பு
-
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
-
ம.பி., குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் இருமல் மருந்து ஆலை உரிமையாளர் கைது
-
இருதய அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லை; ஏழை நோயாளிகள் பலியாகும் பரிதாபம்
Advertisement
Advertisement