திருப்பதி ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை, அக். 9-
திருப்பதி ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடப்பதால், சென்ட்ரல், அரக்கோணம் - திருப்பதி ரயில்கள் வரும் நவ., 5 வரை, திருச்சானுார் வரை மட்டும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
l அரக்கோணம் - திருப்பதி காலை 9:15 மணி ரயில், சென்ட்ரல் - திருப்பதி காலை 9:50 மணி ரயில் ஆகியவை, திருச்சானுாருக்கு இயக்கப்படும்
l திருப்பதி - சென்ட்ரல் மதியம் 1:25 மணி ரயில், திருப்பதி - அரக்கோணம் மாலை 3:40 மணி ரயில் திருச்சானுாரில் இருந்து இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement