அணுசக்தி துறையில் தனியாருக்கு வாய்ப்பு: பிரதமர் மோடி

மும்பை: '' இந்தியாவில் அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியா பிரிட்டன் சிஇஓ கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: தனியார் துறைக்காக அணுசக்தி துறையை திறந்து விட்டுள்ளோம். இது இரு நாட்டு ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி புது உயரத்துக்கு எடுத்துச் செல்லும். இந்தியாவின் இந்த வளர்ச்சி பயணத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்படுகிறது. 2020க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற நிலையை நோக்கி முன்னேறி வருகிறோம். இந்தியாவும், பிரிட்டனும் சேர்ந்து சர்வதேச அளவில் புதிய சாதனைகளை படைக்கட்டும்.
இந்திய பொருளாதாரத்தில் நிறைய சீர்திருத்தங்களை செய்துள்ளோம். சிக்கல்களை குறைத்து எளிதாக தொழில் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளோம். சமீபத்தில் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் கொண்டுவந்துள்ளோம். இது நடுத்தர வர்க்கம் மற்றும் சிறுகுறு தொழில்துறையினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதுடன், அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
@block_B@
மும்பை வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரும், பிரதமர் மோடியும் ஒரே காரில் பயணம் செய்தனர். இது குறித்த புகைப்படத்தை வெளியிட்ட பிரதமர் மோடி, இந்தியா - பிரிட்டன் இடையிலான உறவு முன்னேறுகிறது. மிகுந்த துடிப்புடன் உள்ளது. இன்று, நானும், கெயிர் ஸ்டார்மரும் சர்வதேச பின்டெக் விழாவில் பங்கேற்க எங்களது பயணத்தை தொடங்கிய போது எடுத்த படம் எனக்கூறியுள்ளார். block_B
@twitter@https://x.com/narendramodi/status/1976301414415528137twitter
