பஸ் படிக்கட்டில் பயணம் விழுந்து மாணவர் காயம்

விருதுநகர் : விருதுநகர் அருகே அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சாம் 20. இவர் விருதுநகரில் தனியார் கல்லுாரியில் பி.இ., இறுதியாண்டு படிக்கிறார். இவர் அக். 8ல் தனியார் பஸ்சில் கல்லுாரிக்கு சென்று வீடு திரும்பும் போது படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்தார்.

சிவகாசி ரோட்டில் மாலை 4:45 மணிக்கு உப்போடை பாலத்திற்கு அருகே வளைவில் சென்ற போது படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்து தலையில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆமத்துார் போலீசார் பஸ் டிரைவர் கண்ணன், கண்டக்டர் வேலுச்சாமி மீது வழக்கு பதிந்தனர்.

Advertisement