அதிகாலை பயணத்தால் விபரீதம்: ஓசூர் சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி

ஓசூர்: ஒசூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி இன்று (அக் 12) அதிகாலை 4 மணிக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேரண்டபள்ளி வனப்பகுதியில் சென்ற போது முன் சென்ற பிக்கப் வாகனம் மீது மோதியது. காருக்கு பின் தொடர்ந்து வந்த லாரியும் இந்த வாகனங்கள் மீது மோதியது. அடுத்தடுத்து வேறு சில வாகனங்களும் மோதின. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த முகிலன், 30. இவர் யுபிஎஸ்சி தேர்வுக்காக பெங்களூரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தவர் என்று தெரியவந்துள்ளது. மற்ற மூவரும் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.







மேலும்
-
தொழிலில் தெளிவும் தொடர் முயற்சியும் இருந்தால் வெற்றி!
-
எதிர் நடவடிக்கை எடுப்போம்; 100% வரி விதித்த அமெரிக்காவுக்கு சீனா பதில்
-
வரிசை கட்டி நிற்கும் வாரிசுகள்: பீஹார் தேர்தலில் வெற்றி யாருக்கு?
-
அரசின் குறட்டையை அம்பலமாக்கிய இருமல் மருந்து விவகாரம்: 15 ஆண்டாக ஆய்வுக்குப் போகாத அதிகாரிகளால் அதிர்ச்சி!
-
ஆப்கன் படை தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் 12 பேர் பலி
-
டில்லியில் இருந்து சீனாவுக்கு விமான சேவை: நவம்பர் 10ல் தொடங்குகிறது