அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி; 20 பேர் காயம்

வாஷிங்டன்: தெற்கு கரோலினாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் தெற்கு கரோலினாவின் தீவில் உள்ள ஒரு நெரிசலான பாரில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை போலீசார் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டிலிலிருந்து தப்பிக்க பலர் தப்பியோடிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இது அனைவருக்கும் ஒரு துயரமான மற்றும் கடினமான சம்பவம். இந்த சம்பவத்தை நாங்கள் தொடர்ந்து விசாரிக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. நேற்று கால்பந்து மைதானம் மற்றும் பள்ளி என இருவேறு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
