அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி நிர்வாகிகளுக்கு பயிற்சி

திண்டிவனம்; மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் சட்டசபை தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஓட்டுச்சாவடி கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

தீவனுாரில் நடந்த முகாமிற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாலமுருகன், கடலுார் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் அரிகரன் சிறப்புரையாற்றினர்.

முகாமில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஓட்டுச்சாவடி கிளை நிர்வாகி, தி.மு.க., அரசின் குறைகள் மற்றும் அ.தி.மு.க., ஆட்சியின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரமண்டூர் கூட்டுறவு வங்கி தலைவர் சீனு, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் செந்தில், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், மயிலம் தொகுதி செயலாளர் சம்பத், ஒன்றிய ஐ.டி., பிரிவு சஞ்சய் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement