சுடுகாடு வசதி கேட்டு போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த நல்ல குட்லஹள்ளி ஊராட்சி நடூர் கிரா-மத்தில், 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.


இவர்கள், அதே பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கப்பட்டு, இறந்தவர்களை அடக்கம் செய்து வந்தனர். அரசு சாலை வசதியும் செய்து கொடுத்துள்ளது. ஆனால் தற்போது சிலர் அந்த அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். எனவே, அதிகாரிகள் பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற, பலமுறை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. நேற்று அப்ப-குதி மக்கள், சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சுடுகாட்டில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement