இளம்பெண் மாயம்; போலீஸ் விசாரணை

திண்டிவனம்; இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூரை சேர்ந்தவர் சார்லஸ் இன்பசீலன் மனைவி ஜெயஸ்ரீ மேனகா, 36; இவர்களுக்கு கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன், திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். புதுச்சேரி, தில்லை மேஸ்திரி சாலையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 8ம் தேதி திண்டிவனம் அடுத்த சிங்கனுாரில் உள்ள தனது தந்தை இளங்கோவன், 70; என்பவர் வீட்டிலிருந்து ஜெயஸ்ரீ மேனகா காரில் சென்னைக்கு சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கி டைக்கவில்லை.

திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement