மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை அருகே மது பாட்டில் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் மது பாட்டில் விற்பதாக எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் அஞ்சாமணி, 25; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வட குரும்பூர் பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி, 51; என்பவரை கைது செய்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement