'சிக்கண்ணா'வில் கலைத்திருவிழா

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், கல்லுாரி கலைத்திருவிழா நடந்தது.

உயர்கல்வித்துறை சார்பில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், செப். 16ம் தேதி முதல் நடந்து வந்த கல்லுாரி கலைத்திருவிழாவின் நிறைவு விழா கடந்த 10ம் தேதி நடந்தது.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர் விஜயகீதா வரவேற்றார். பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, அமிர்தராணி வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் சுந்தரராஜன் கலந்துகொண்டு பேசுகையில் மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோரையும் ஆசிரியரையும் மதிக்க வேண்டும். எனக்கு தெரியாது என்று எதையும் ஒதுக்கிவிடக்கூடாது.

வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது எளிது, அதைத் தக்கவைத்துக்கொள்வது கடினம். ஒவ்வொரு மாணவரிடமும் தனித்திறன் உள்ளது. அதை வெளிக்கொண்டு வருவது அவரவர் பொறுப்பாகும் என்றார்.

நிகழ்ச்சியில் 30 வகை போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். மாணவர்கள் நித்தீஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஒருங்கிணைத்தனர்.

Advertisement