பா.ஜ., - த.வெ.க.,வுடன் அ.தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி: தம்பிதுரை
கிருஷ்ணகிரி: ''அ.தி.மு.க., தலைமையில், பா.ஜ., - த.வெ.க.,வுடன் மெகா கூட்டணி அமையும்,'' என, ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை எம்.பி., பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் நாகோ-ஜனஅள்ளி பேரூராட்சியில், ராஜ்யசபா எம்.பி., நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைத்த, நாடக மேடை, பயணியர் நிழற்கூடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் வரும், 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ., - த.வெ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன், அ.தி.மு.க., தலை-மையில் மெகா கூட்டணி அமையும். தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவது தான் எங்களுடைய குறிக்கோள். நிச்சயம் இ.பி.எஸ்., தமிழகத்தில் மீண்டும் முதல்வராக வருவார். பள்ளி, மாணவ, மாணவிகளுக்கும், விவசாயிகளுக்கும், பொதுமக்க-ளுக்கும் எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்து செய்து காட்டியது, அ.தி.மு.க., அரசு தான். இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்ட அம்மா பேரவை தலைவர் தங்கமுத்து உள்பட பலர் பங்-கேற்றனர்.