உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சக லாரி ஓட்டுநர்கள் நிதியுதவி

ராயபுரம்: சென்னை துறைமுகத்தில் சி.சி.டி.எல்., - சி.ஐ.டி.பி.எல்., என்ற தனியார் சரக்கு பெட்டக முனையங்களும், எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் தனியார் நிர்வகிக்கும் கன்டெய்னர் முனையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த துறைமுகங்களில், 5,000க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் உயிரிழந்த ஆறு ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி, 26 லட்ச ரூபாய் நிதி வழங்கி உள்ளனர்.
இது குறித்து சென்னை துறைமுக டிரைலர் மற்றும் டாரஸ் ஓட்டுநர் நலச்சங்க துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களில், திருநெல்வேலியை சேர்ந்த ராஜகோபால், பெரம்பலுாரைச் சேர்ந்த சுப்ரமணி, சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்த சுப்பையா; காசிமேடைச் சேர்ந்த விஜயகுமார், கள்ளகுறிச்சியைச் சேர்ந்த வெற்றிவேல், அரக்கோணத்தைச் சேர்ந்த ராமன் ஆகிய ஓட்டுநர்கள் உடல்நலக் குறைவு மற்றும் விபத்தால் உயிரிழந்தனர்.
அவர்களின் குடும்பத்திற்காக, ஓட்டுநர்கள் ஒவ்வொருவரும் 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை, நிதி உதவி அளித்தனர்.
அந்தவகையில், 26 லட்ச ரூபாய் திரட்டப்பட்டது. அதை, ஆறு பேரின் குடும்பங்களுக்கு, தலா 4.50 லட்ச ரூபாய் என, வழங்கி உள்ளோம். இதுவரை 35க்கும் மேற்பட்டோருக்கு, ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் வரை வசூல் செய்து கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை
-
போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது
-
விருத்தாசலம் வியாபாரியிடம் சினிமா பாணியில் மொபட் 'அபேஸ்'