தி.மு.க.,வில் இணைந்த பா.ஜ.,வினர்

திருவேற்காடு: திருவேற்காடு, சிவன் கோவில் சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாற்று கட்சியைச் சேர்ந்தோர், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் முன்னிலையில், நடந்த இந்நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில பிரதிநிதி பாரதிராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், 350 பேர், பா.ஜ.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர்.

Advertisement