இளம்பெண்ணை தாக்கிய ரவுடி உட்பட மூவர் கைது

புளியந்தோப்பு:அம்பத்துார் சரக காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 18 வயது பெண், புளியந்தோப்பு, நேரு நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று, இரண்டு வாரங்களாக அங்கேயே தங்கியுள்ளார். அவரது உறவினர் வீட்டின் அருகே வசிக்கும், திவ்யா என்பவரை தேடி, புளியந்தோப்பு, சாஸ்திரி நகரைச் சேர்ந்த 'சி' பிரிவு ரவுடியான ஜோஷ்வா, 25, என்பவர், கடந்த 10ம் தேதி இரவு வந்துள்ளார்.

அப்போது, அங்கு நின்றிருந்த இளம்பெண்ணிடம், 'திவ்யா எங்கே' என கேட்டு பேச்சு கொடுத்துள்ளார். அவர் தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த ரவுடி ஜோஷ்வா மற்றும் அவரது கூட்டாளிகள் இளம்பெண்ணின் தலையில் கையால் தாக்கினர்.

மேலும், மொபைல்போனை பிடுங்கி உடைத்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். சிறுமியின் உறவினர்கள், கொடுத்த புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார் ரவுடி ஜோஷ்வா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி அபி, 25 மற்றும் திலீப், 25, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement