ரயில் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
தர்மபுரி: நாடு முழுவதும் அக்., 20 அன்று தீபாவளி பண்டிகை கொண்-டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.
இதில், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் வழியாக, பண்டிகை கால சிறப்பு ரயில்கள் சென்று வருகின்றன. இதில், பயணம் செய்ய வரும் பயணிகள் எளிதில் தீ பற்ற கூடிய பொருட்களை குறிப்பாக, பட்டாசு, காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், தீப்பெட்டி, சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர்கள் உள்-ளிட்ட பொருட்களை கொண்டு செல்வது பயணிகள் பாதுகாப்-புக்கு அச்சுறுத்தல் மற்றும் சட்டபடி குற்றம். எனவே, ரயில் பய-ணத்தின் போது அவற்றை எடுத்து செல்லக்கூடாது என, தர்மபுரி ஆர்.பி.எப்., எஸ்.ஐ., நாராயணா ஆச்சர்யா தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் பய-ணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு, ரயில் பெட்டிகளில் ஜன்னல் ஓரம் பயணம் செய்யக்கூடாது. ரசாயனத்தை ஊசிகள் மூலம் பிஸ்-கட்களில் செலுத்தி, அதை கொடுத்து பலர் திருட்டில் ஈடுபடு-வதால், சக பயணிகளிடம் தின்பண்டங்கள் வாங்கி உண்பதை தவிர்க்க, ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.