நாய், கோழிகளை விஷம் வைத்து கொன்ற மர்மநபர்களுக்கு வலை
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உல்லட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரின்ஸ், 37. ஓசூரில், சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
இவருக்கு, சின்ன உள்ளுகுறுக்கை கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த கோழிகள் மற்றும் நாய்களுக்கு, அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், நேற்று முன்தினம் காலை, 9:50 மணிக்கு முன், கோழி இறைச்சி கழிவுகளுடன் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். இதை சாப்பிட்ட தலா இரு நாய்கள், கோழிகள் உயிரிழந்தன. இது தொடர்பாக பிரின்ஸ் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, ராயக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement