டேக் வாண்டோவில் மாணவர்கள் சாதனை

உசிலம்பட்டி : பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட டேக்வாண்டோ போட்டிகள் நாகமலை புதுக்கோட்டையில் நடந்தது.

இதில் 14 வயதுக்குட்பட்ட 25-27 கிலோ எடைப்பிரிவில், மேக்கிழார்பட்டி அரசு கள்ளர் பள்ளி மாணவர் பிரிதிக் முதலிடம், நாடார் மெட்ரிக் பள்ளி மாணவர் மோனிஷ்ராஜ் 38-41 கிலோ எடைப்பிரிவில் முதலிடம், நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் தேனிசை அமுதன் மூன்றாமிடம், 17 வயதுக்குட்பட்டோர் 41--45 கிலோ எடைப்பிரிவில் ரோகன்பிரசாத் இரண்டாமிடம், 63--68 கிலோ எடைப்பிரிவில் வீரணன் இரண்டாமிடம், 68--73 கிலோ எடைப்பிரிவில் பார்வின் மூன்றாமிடம், 45--48 கிலோ எடைப்பிரிவில் சச்சின் மூன்றாமிடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். வென்ற மாணவர்கள், பயிற்சியாளர்கள் யுவராஜா, நடராஜன் ஆகியோரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Advertisement