ராமநாதபுரம் தள்ளுவண்டி தொழிலாளர்களிடம் பொருட்கள் பறிமுதல்: சி.ஐ.டி.யு., கண்டனம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சி.ஐ. டி.யு., அலுவலகத்தில் தள்ளுவண்டி, தட்டு துாக்கி விற்பனை செய்யும் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சிவாஜி தலைமை வகித்தார். இதில் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் 30 ஆண்டுகளாக தள்ளுவண்டி மூலமாகவும், தட்டுக்கள் துாக்கியும் வியாபாரம் செய்கின்றனர். அனைவரும் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தில் இணைந்து கட்டுப்பாடுடன் தொழில் செய்கின்றனர்.
தற்போது புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட துவங்கியவுடன் ஏற்கனவே பார்த்த தொழிலை செய்ய துவங்கியுள்ளனர். அக்.11 நகராட்சி ஊழியர்கள் சிலர் விற்பனை செய்த தொழிலாளிகளை அநாகரிகமாக பேசி, வண்டியில் இருந்த பொருட்களையும் அபகரித்துச் சென்றனர்.இதனை சி.ஐ.டி.யு., வன்மையாக கண்டிக்கிறது.அநாகரிகமாக நடந்து கொண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளிகளிடம் பறித்துச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும்
-
வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த தீவிரம்; இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சு
-
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை