திருப்புத்துார் அருகே ரோட்டில் உருவான மெகா பள்ளத்தால் ஆபத்து

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் கருப்பூர் செல்லும் ரோட்டின் நடுவில் ரோடு சேதமடைந்து போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது.
திருப்புத்துாரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் கருப்பூருக்கு விலக்கு ரோடு பிரிகிறது. இந்த ரோட்டின் முகப்பில் வேகத்தடைக்கு அடுத்து நடுவில் ரோடு சேதமடைந்து தார் பெயர்ந்து பெரும் பள்ளமாக காணப்படுகிறது.
வாகனப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இரவில் டூ வீலர்களில் வருபவர்கள் இதில் செல்லும் போது தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இது குறித்து கிராமத்தினர் கூறுகையில் ' புகார் அளித்து பல நாட்களாகியும் ரோட்டை சரி செய்யவில்லை. கேட்டால் தார் இல்லை.
வந்தவுடன் சரி செய்கிறோம் என்கிறார்கள். இந்த ரோட்டை ஆலம்பட்டி, மாதவராயன்பட்டி, முறையூர், திருக்களாப்பட்டி, மருதிப்பட்டி கிராமத்தினரும் பயன் படுத்துகின்றனர்.
ரோட்டில் சேதமான பகுதியை முழுமையாக அகற்றி அடித்தளத்தை வலுவாக்கி முழுமையாக பராமரிக்க கோரியுள்ளனர்.
மேலும்
-
வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த தீவிரம்; இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சு
-
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை