ஆபரணத்தங்கம் காலையில் ரூ.200, மாலையில் ரூ.440 அதிரடி உயர்வு; சவரன் விலை ரூ.92,640

1

சென்னை: சென்னையில் இன்று மீண்டும் இருமுறை ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது. காலையில் ரூ.200 உயர்ந்து காணப்பட்ட நிலையில் மாலையில் ரூ.440 அதிகரித்துள்ளது.



சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதாரச்சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகளால் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. சில தருணங்களில் காலை, மாலை என இருமுறை தங்கம் விலையில் ஏற்றம் காணப்படுகிறது.


அதன்படி இன்று காலை சவரன் ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 92,200 என்ற புதிய உச்சத்தை எட்டியது. ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து, ரூ.15,525க்கு விற்பனையானது. இந் நிலையில், இன்று மாலையிலும் தங்கத்தின் விலை அதிரடி உயர்ந்துள்ளது.


அதன்படி, ஒரு கிராம் ரூ.55 உயர்ந்து ரூ.11,580 ஆக உள்ளது. சவரன் ரூ.440 அதிகரித்து ரூ.92,640 என்கிற புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. வெள்ளி விலையும் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.197ஆக விற்கப்படுகிறது.

Advertisement