இஸ்ரேல் பார்லியில் டிரம்ப் பேசும்போது எம்.பி.,க்கள் இடையூறு!

ஜெருசலேம்: இஸ்ரேல் பார்லிமென்டில் அதிபர் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது, எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர்.
காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. இதனையடுத்து முதற் கட்டமாக இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து உள்ளனர். இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாராட்டும் வகையில், இஸ்ரேல் பார்லிமென்டில் நிகழ்ச்சி நடந்தது. பார்லிமென்டில் அதிபர் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இரண்டு உறுப்பினர்கள் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதனால் இஸ்ரேல் பார்லிமென்டில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவை பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
ஐமென் ஓடே மற்றும் ஓபர் காசிப் அகிய இரண்டு உறுப்பினர்கள் தான் கோஷம் எழுப்பினர். அதில் ஒருவர் இனப்படுகொலை என எழுதப்பட்டிருந்த பதாகையை தூக்கிபிடித்திருந்தார். இந்த சம்பவம் பேசும் பொருளாகி உள்ளது.
கடந்த கால சம்பவம்!
சமீபத்தில், ஐநா சபையில் டிரம்ப் உரையாற்றிய போதும் பல வகையில் தொந்தரவு கொடுக்கப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு:
* முதலாவதாக டிரம்ப் உரையாற்ற மாடிக்கு செல்லும் எஸ்கலேட்டர் செயலிழந்துவிட்டது. பின்னர் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா உள்ளிட்டோர் படிக்கட்டுகள் வாயிலாக நடந்து சென்றனர்.
* கூட்டத்தில் டிரம்ப் பேசுவதற்கு மேடை ஏறி நின்ற போது, டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை. பின்னர் அவர் தானாகவே உரையை தொடங்கிய பிறகு, சிறிது நேரம் கழித்து தான் டெலிப்ராம்ப்டர் வேலை செய்ய தொடங்கியது.
* அதுமட்டுமின்றி, உரை நிகழ்த்தப்பட்ட ஆடிட்டோரியத்தில் ஒலி முற்றிலுமாக அணைந்துவிட்டது.
தற்போது இஸ்ரேல் பார்லிமென்டில் டிரம்ப் பேசிய போது, இடையூறு செய்யும் வகையில் கோஷம் எழுப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.


மேலும்
-
வனத்தில் இறந்த யானை குறித்து விசாரணை
-
மானியத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் கூடலுார் விவசாயிகளுக்கு அழைப்பு
-
சாலையை கடந்த தொழிலாளி பைக் மோதி உயிரிழப்பு
-
ஊராட்சியில் ரூ.3.71 கோடியில் வளர்ச்சி பணிகள்: விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
-
குறைதீர்வு கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு
-
காஞ்சிக்கு ரூ.52 கோடி ஒதுக்கியது மத்திய நிதிக்குழு திட்ட பணிகளை துவக்காமல் அதிகாரிகள் அலட்சியம்