தூத்துக்குடி டூ சென்னை புறப்பட்ட விமானத்தின் கண்ணாடியில் விரிசல்; நடுவானில் திடீர் பரபரப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 67 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முன் பக்கம் உள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. திடீரென கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.
பின்னர் அவர் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். விமானத்தை சென்னையில் தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. ஆபத்தை அறிந்த விமானி விமானத்தை சாதுர்யமாக இயக்கி, சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.
விமானியின் சாதுர்யமான நடவடிக்கையால் விமானத்தில் பயணித்த 67 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதற்கிடையே, நடுவானில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது திடீரென முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து (1)
Vasan - ,இந்தியா
13 அக்,2025 - 21:22 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement