டிரம்ப் முயற்சிக்கும், நெதன்யாகு உறுதிக்கும் கிடைத்த கவுரவம்: பிரதமர் மோடி

புதுடில்லி: ஹமாஸ் பிடியில் இருந்து இரண்டு ஆண்டுகள் பிடியில் இருந்து பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள் ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக்கைதிகள், அதிபர் டிரம்ப்பின் முயற்சி காரணமாக இன்று விடுவிக்கப்பட்டனர். இதனால், இரண்டு ஆண்டுகள் நீடித்த போர் முடிவுக்கு வருகிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இரண்டு ஆண்டுகள் பிடித்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதை வரவேற்கிறேன். அவர்களின் விடுதலையானது.
அவர்களின் குடும்பத்தின் தைரியத்துக்கும், அதிபர் டிரம்ப்பின் இடைவிடாத அமைதி முயற்சிகளுக்கும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலிமையான உறுதிப்பாட்டுக்கும் கிடைத்த கவுரவமாக நிற்கிறது. இந்த பகுதியில் அமைதியை கொண்டு வரும் டிரம்ப்பின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

